உக்ரைன் கொடியின் நிறத்தில் ஒளிரும் நயாகரா நீர்வீழ்ச்சி..!


உக்ரைன் கொடியின் நிறத்தில் ஒளிரும் நயாகரா நீர்வீழ்ச்சி..!
x
தினத்தந்தி 28 Feb 2022 11:39 AM GMT (Updated: 28 Feb 2022 11:39 AM GMT)

உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நயாகரா நீர்வீழ்ச்சி உக்ரைன் கொடியின் நிறத்தில் ஒளிரவிடப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

கடந்த பிப்ரவரி 24-ந்தேதி ரஷிய அதிபர் புதின், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை அறிவித்தார். தொடர்ந்து இன்றும் 5-வது நாளாக அங்கு இரு நாட்டு ராணுவத்தினரும் இடையே தாக்குதல் நடந்து வருகிறது. 

உலகின் பல நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா - கனடா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள நயாகரா நீர்வீழ்ச்சி உக்ரைனின் தேசிய கொடியின் நீலம், மஞ்சள் நிறத்தில் ஒளிரச் செய்யப்பட்டுள்ளது.

நீர்வீழ்ச்சியில் அந்த நிறங்கள் ஒற்றுமையை குறிக்கும் வகையிலும் ரஷிய படையெடுப்பை எதிர்த்து உக்ரைன் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் ஒளிர விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story