இந்திய மாணவர் நவீன் மரணம் குறித்து உரிய விசாரணை: ரஷ்ய தூதர்


இந்திய மாணவர் நவீன் மரணம் குறித்து உரிய விசாரணை: ரஷ்ய தூதர்
x
தினத்தந்தி 2 March 2022 9:18 AM GMT (Updated: 2 March 2022 10:01 AM GMT)

இந்திய மாணவர் நவீன் மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தாலும், மற்றொரு பக்கம் சண்டையும் உக்கிரம் அடைந்து வருவது சர்வதேச நாடுகளை உலுக்கி வருகிறது.  குறிப்பாக தலைநகரான கீவ் நகரை கைப்பற்றுவதில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது. 

நேற்று நடந்த 6-ம் நாள் போரில் கார்கிவ் நகரில் ரஷிய படையினரின் குண்டுவீச்சில் இந்திய மாணவர்  நவீன் சேகர கவுடா  என்பவர்  பலியாகி இருப்பது, அங்கு தவித்து வருகிற இந்திய மாணவர்கள் மத்தில் தீராத சோகத்தையும், இந்தியாவில் உள்ள அவர்களது பெற்றோர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  இந்திய மாணவர் நவீன் மரணம் விசாரிக்கப்படும் என  இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார். காணொலி காட்சி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்த டெனிஸ் அலிபோவ் மேலும் கூறுகையில், 

“ கார்கிவ் -ல் சிக்கியுள்ள இந்தியர்களின் விவரங்கள் தொடர்பாக தூதரக அதிகாரிகளுடன் பேசியுள்ளோம். இந்தியர்களை ரஷிய எல்லை  வழியாக அவசரமாக வெளியேற்ற வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியர் நவீன் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்.  ஐநா கவுன்சில் ரஷியாவுக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காமல் புறக்கணித்தற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார். 

Next Story