பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி


பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி
x
தினத்தந்தி 2 March 2022 5:26 PM GMT (Updated: 2022-03-02T22:56:06+05:30)

பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் 3 போலீசார் உயிரிழந்துள்ளனர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் குவெட்டா பகுதியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 3 போலீசார் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் காயமடைந்துள்ளனர்.

முன்னதாக குவெட்டா பகுதியில் உள்ள பாத்திமா ஜின்னா சாலையில் திடீரென சில சமூக விரோதிகள் வெடிகுண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. வெடி விபத்திற்கான காரணம் குறித்த தெளிவான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. 

இந்த குண்டு வெடிப்பினால் அருகிலிருந்த கடையில் தீப்பற்றி எரிந்தது. இந்த நிலையில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 3 போலீசார் உயிரிழந்துள்ளனர். 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

மீட்பு குழுவினர் மற்றும் போலீசார் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்தில் உள்ளனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக குவெட்டா அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்காக மருத்துவமனையில் அவசர நிலையும் விதிக்கப்பட்டுள்ளது.

Next Story