நியூசிலாந்தில் மீன்பிடி படகு கடலில் கவிழ்ந்து 4 பேர் பலி


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 21 March 2022 7:46 PM GMT (Updated: 21 March 2022 7:46 PM GMT)

நியூசிலாந்தில் மீன்பிடி படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் பலியாகினர்.

வெலிங்டன்,

நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள கைதயா நருக்கு அருகே கடலில் மீன்பிடி படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. படகில் மீனவர்கள் 10 பேர் இருந்தனர்.

படகு நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது அங்கு பலத்த புயல் காற்று வீசியது. புயலில் சிக்கிய மீன்பிடி படகு நிலைதடுமாறி கடலில் கவிழ்ந்தது. இதை தொடர்ந்து படகில் இருந்த மீனவர்கள் அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர்.

இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் கடலோர காவல் படையினர் மீட்பு படகுகளில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ஹெலிகாப்டரும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது. எனினும் பல மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின் 4 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது.

இதற்கிடையில், படகு கவிழ்ந்த இடத்துக்கு சிறிது தொலைவில் நீரில் தத்தளித்தக்கொண்டிருந்த 5 மீனவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் ஒருவர் மாயமாகினார். அவரின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

Next Story