பிரான்சில் புதிதாக ஒரே நாளில் 1.02 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 3 April 2022 6:46 PM GMT (Updated: 3 April 2022 6:46 PM GMT)

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,02,266 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பாரீஸ்,

உலக அளவில் இதுவரை 49.14 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 61.75 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

பிரான்சில் கொரோனா வைரஸ் மற்றும் ஓமைக்ரான் பரவலால், நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,02,266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரான்சில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 2,16,46,085 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் மேலும் 34 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 563 ஆக உயர்ந்துள்ளது. பிரான்சில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 1,69,72,700 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 45,42,822 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பிரான்சில் பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளிகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் முகக் கவசம் அணிவது கட்டாயம் இல்லை. ஆனால், பொதுப் போக்குவரத்து, மருத்துவமனைகளில் முகக் கவசம் அணிய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story