ஸ்காட் மோரிசன் மீண்டும் ஆட்சியை தக்க வைப்பாரா? ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் பொதுத் தேர்தல்!


ஸ்காட் மோரிசன் மீண்டும் ஆட்சியை தக்க வைப்பாரா? ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் பொதுத் தேர்தல்!
x
தினத்தந்தி 10 April 2022 3:26 AM GMT (Updated: 10 April 2022 3:26 AM GMT)

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் மே 21ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.அடுத்த மாதம் தேர்தல் நடைபெறுவதை ஆஸ்திரேலிய பிரதமர் அலுவலகம் இன்று உறுதி செய்தது.

ஸ்காட் மோரிசன் பிரதமராக இருக்கும் கூட்டணி மீண்டும் ஆட்சியை  தக்க வைக்குமா அல்லது அந்தோணி அல்பானீஸ் தலைமையில், புதிதாக ஆஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கத்தை அமைக்குமா  என்பதை முடிவு செய்ய, ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெறும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவின் பிரதமராக ஸ்காட் மோரிசன் பதவி வகித்து வருகிறார். 

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் லிபரல் கட்சியின் ஒன்பது வருட ஆட்சிக்குப் பிறகு,  தற்போதைய பிரதமர் மோரிசனின் பழமைவாதக் கூட்டணி எதிர்க்கட்சியான தொழிற்கட்சியை விட,  பின்தங்கி இருப்பதாக கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.

இதற்கிடையே சிட்னியில் நடைபெற்ற ராயல் ஈஸ்டர் கண்காட்சியில் தொழிலாளர் கட்சித் தலைவர் அந்தோணி அல்பானீஸ், வாக்காளர்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள், காலநிலை மாற்றம் மற்றும் பிரதமரின் திறன் பற்றிய கேள்விகள் ஆகியவை முக்கிய பிரச்சினைகளாக ஆளுங்கட்சிக்கு எதிராக இந்த தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story