எரிபொருள் விலை உயர்வு, வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு...பிரேசில் அதிபருக்கு எதிராகப் போராட்டம்


எரிபொருள் விலை உயர்வு, வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு...பிரேசில் அதிபருக்கு எதிராகப் போராட்டம்
x
தினத்தந்தி 10 April 2022 9:53 AM GMT (Updated: 10 April 2022 9:53 AM GMT)

பிரேசில் எரிபொருள் விலை உயர்வு, வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு காரணமாக அந்நாட்டு அதிபருக்கு எதிராகப் மக்கள் போராட்டம் நடத்தினர்.

பிரேசிலியா,

பிரேசிலில் கடந்த சில நாட்களாக எரிபொருள் விலை உயர்வால் அந்நாட்டு மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது மட்டுமின்றி அந்நாட்டில் வேலைவாய்ப்பின்மையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

எரிபொருள் விலை உயர்வு, வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளால் அந்நாட்டு மக்கள் தினந்தோறும் அவதி அடைந்து வருகின்றனர். விலை உயர்வை கட்டுப்படுத்தவும், வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், எரிபொருள் விலை உயர்வு, வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு காரணமாக பிரேசிலில் பொதுமக்கள் சாலையில் நின்று போராட்டம் நடத்தினர். பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோவுக்கு எதிராக நூற்றுக்கணக்கான மக்கள் கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் கோஷங்கள் எழுப்பினர். பணக்காரர்களுக்கான் அரசாக இல்லாமல், சாமானியர்களுக்கான அரசாக பிரேசில் அரசாங்கம் செயல்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story