ஆப்கானிஸ்தான் பள்ளி வளாகத்தில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு


ஆப்கானிஸ்தான் பள்ளி வளாகத்தில்  அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 19 April 2022 10:11 AM GMT (Updated: 2022-04-19T15:41:42+05:30)

மேற்கு காபூலில் உள்ள அப்துல் ரஹீம் சாஹித் உயர்நிலைப் பள்ளி வளாகத்தின் அருகே அடுத்தடுத்த 3 குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.

காபூல்,

ஆப்கானிஸ்தான் கடந்த ஆகஸ்ட் மாதம் நேட்டோ மற்றும் அமெரிக்கப் படைகள் வெளியேறின. அதன்பின்னர் அங்கு தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர்.  ஆப்கானிஸ்தானில் மிகக் கடுமையான சட்டங்களை பின்பற்றி வரும் தலீபான்கள்,  இதுவரை பெண் கல்வியை அங்கீகரிக்கவில்லை. பள்ளி, கல்லூரிகளில் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை மேற்கு காபூலில் உள்ள அப்துல் ரஹீம் சாஹித் உயர்நிலைப் பள்ளி வளாகத்தின் அருகே அடுத்தடுத்த 3 குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதனையடுத்து அப்பகுதியில் தலிபான் படைகள் சுற்றிவளைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.இந்த தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இந்த கொடூர தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. 

Next Story