இலங்கை பொருளாதார நெருக்கடி : அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகுகிறாரா...?


Image courtesy: PTI
x
Image courtesy: PTI
தினத்தந்தி 20 April 2022 11:29 AM GMT (Updated: 20 April 2022 11:29 AM GMT)

இலங்கை பொருளாதார நெருக்கடியால் அதிகரிக்கும் மக்கள் போராட்டத்தை தொடர்ந்து கோத்தபய ராஜபக்சே பதவி விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொழும்பு

 இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ஆகியவற்றை வாங்க முடியவில்லை. அதனால் அந்த பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடுகிறார்கள். 

பல மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டி இருக்கிறது. மின்சார தட்டுப்பாடு காரணமாக நீண்ட நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.  அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக்கோரி, அவரது அலுவலகம் எதிரே ஒருவாரத்திற்கும் மேலாக தொடர் போராட்டம் நீடித்து வருகிறது.  அதேபோல், பல இடங்களில் தெருமுனை போராட்டங்களும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. 

அந்த வகையில்,  இலங்கையின் கேகாலை மாவட்டம் ரம்புக்கன பகுதியில் இலங்கை அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.  இதில், நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் பலர் காயம் அடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த  இன்று நாடாளுமன்ற  கூட்டத்தில் உரையாற்றிய  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 
 
அனைத்துக் கட்சித் தலைவர்களும் தன்னை பதவி விலகுமாறு கோரினால் அதற்குத் தயார் என சபாநாயகரிடம் ஜனாதிபதி அறிவித்துள்ளார். 

கட்சி கூட்டத்தின் போது சபாநாயகர் இந்த விஷயத்தை குறிப்பிட்டிருந்தார். இதனை மேற்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

எதிர்கட்சியை சேர்ந்த அனைவரும் ஒன்று சேர்ந்து இதனை செய்ய  தயாராக இருக்கின்றோம் என அவர் கூறினார்.

Next Story