ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஐநா கண்டனம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 23 April 2022 4:14 AM GMT (Updated: 23 April 2022 4:14 AM GMT)

ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஐநா கண்டனம் தெரிவித்துள்ளது.

நியூயார்க்,

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர்.  மசார்-இ-ஷரீப்பில் உள்ள சே டோகன் மசூதிக்கு எதிரான தாக்குதல் மற்றும் இஸ்லாமிய அரசு உரிமை கோரும் குண்டூஸில் தனி தாக்குதல்களினால், பொதுமக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளனர்.

இந்த நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு கண்டனத்தை தெரிவித்தனர். அவர்கள் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்தனர்,

பயங்கரவாதம் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது என்றும், இந்த கண்டிக்கத்தக்க பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் நிதி வழங்குபவர்கள் நீதியின் முன் நிறுத்த வேண்டியர்கள் என்றும் தெரிவித்தனர்.

பயங்கரவாதிகளை ஒடுக்க பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின் கீழ் அனைத்து அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.


Next Story