தென் ஆப்பிரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா: 5-ம் அலை பரவும் அபாயம்!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 29 April 2022 10:06 AM GMT (Updated: 29 April 2022 10:06 AM GMT)

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா பரவலின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கானப்படுகிறது. அங்கு தொடர்ந்து பாதிப்புகளின் எண்ணிக்கை 14 ஆவது நாளாக அதிகரித்து வருவருகிறது. 

இதனால், கொரோனா 5 ஆம் அலை எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே பரவும்  அபாயம் இருப்பதாக அந்நாட்டின்  சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும், அதிகரித்துவரும் கொரோனா பாதிப்புகள் ஒமைக்ரான் வகையை சேர்ந்தது என்று கூறிய அவர்கள், புதிய மாறுபாட்டை கொண்ட கொரோனா வைரஸ் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


Next Story