அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் உக்ரைனுக்கு திடீர் பயணம்


AP Photo
x
AP Photo
தினத்தந்தி 8 May 2022 2:06 PM GMT (Updated: 8 May 2022 2:06 PM GMT)

திடீர் பயணமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் படைன், உக்ரைனுக்கு சென்றார்.

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 10 வாரங்களை கடந்துள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷியா, பல முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளதாக கூறி வருகிறது. 

தற்போது உக்ரைனின் கிழக்கு நகரங்களை குறிவைத்து தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது.  ரஷியா - உக்ரைன் போரில் உக்ரைனுக்கு  அமெரிக்கா மற்றும்  மேற்கத்திய நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றன. 

இத்தகைய சூழலில், திடீர் பயணமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் படைன், உக்ரைனுக்கு சென்றுள்ளார். உக்ரைனின்  உஹோரோடா நகரத்தில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலேனே ஜெலன்ஸ்கியை ஜில் பைடன் சந்தித்தார். 

ஒரு சிறிய வகுப்பறையில் இருவரும் நேர் எதிரே அமர்ந்தபடி சிறிது நேரம் பேசினர். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில், “ இந்த போர் நிறுத்தப்பட வேண்டியது அவசியம் என்பதை உக்ரைன் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டியுள்ளது.  இந்த போர் கொடூரமானது. ஐக்கிய நாடுகளின் உறுப்பினர்கள் உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்” என்றனர். 


Next Story