போருக்கு மத்தியில் உக்ரைனில் ஜில் பிடன் -ஒலேனா ஜெலென்ஸ்கா சந்திப்பு


Image Courtesy: Susan Walsh/Pool/AFP/Getty Images
x
Image Courtesy: Susan Walsh/Pool/AFP/Getty Images
தினத்தந்தி 9 May 2022 6:52 AM GMT (Updated: 9 May 2022 7:15 AM GMT)

அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பிடன் உக்ரைனின் முதல் பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்காவை சந்தித்தார்

உக்ரைன் மீதான ரஷிய போர், உலகளவில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று (மே.9) இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:-  

மே.9- 12.10 P.M

அமெரிக்கா ஜனாதிபதியின் மனைவியும்  அமெரிக்க முதல் பெண்மனியுமான ஜில் பிடன் உக்ரைனுக்கு அறிவிக்கப்படாத பயணத்தை மேற்கொண்டார். ஜில் பிடன்  ஞாயிற்றுக்கிழமை உக்ரைனின் தென்மேற்கு பகுதியில்  உள்ள சிறிய நகரமான உஸ்ஹோரோடுக்கு சென்றார். 

இடம்பெயர்ந்த குடிமக்களுக்கு  தற்காலிக தங்கும் இடமாக செயல்படும் ஒரு பள்ளியில், ஜில் பிடன் உக்ரைனின் முதல் பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்காவை சந்தித்தார்

மே.9- 11.00 A.M

கடந்த சில நாட்களாக லுஹான்ஸ்கில் உள்ள பாபாஸ்னா என்ற இடத்தில் ரஷ்யப் படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது.

உனிய மக்கள் தஞ்சம் அடைந்து உள்ள  பள்ளிக்கூடம் ஒன்றின் மீது ரஷியா வெடிகுண்டு வீசியதால் 60 க்கும் மேற்பட்டவர்கள்  கணக்கானவர்கள் இறந்ததாக அஞ்சப்படுகிறது.90 பேர் பள்ளியில் தங்கியிருப்பதாகக் கூறப்பட்டது; 60 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. லுஹான்ஸ்க் பிராந்திய இராணுவ நிர்வாகத்தின் தலைவர் செர்ஹி ஹேடே  பள்ளி கட்டிடம் அழிக்கப்பட்டது என கூறி உள்ளார்.

ரஷிய விமானம் ஒன்றிலிருந்து குண்டு விழுந்ததாக லூஹான்ஸ்கின் மேயர் செஹிவ் ஹைடாய் தெரிவித்துள்ளார்.

போருக்கு மத்தியில் கனடா பிரதமர் திடீர் உக்ரைன் பயணம்

உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 2 மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ரஷியாவை பலமாக எதிர்கொண்டு வரும் உக்ரைனுக்கு அமெரிக்கா, கனடா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

குறிப்பாக பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உக்ரைனுக்கே நேரடியாக சென்று அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் கனடா பிரதமர் ஜஸ்டின் டிரிடியூயும் உக்ரைனுக்கு திடீர் பயணம் மேற்கொண்டு உள்ளார். அங்குள்ள இர்பின் நகருக்கு அவர் சென்றுள்ளதாக அந்த நகர மேயர் ஒலக்சாண்டர் மார்குஷினும், உக்ரைன் ஊடகங்களும் தெரிவித்து உள்ளன.

கடுமையான போருக்கு மத்தியில் கனடா பிரதமர் உக்ரைனுக்கு நேரடியாக சென்றிருப்பது சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

மே.9- 1.00 A.M

மரியுபோலில் இருந்து வெளியேற்றப்பட்ட சுமார் 170 பேர் உக்ரைனின் கட்டுப்பாட்டு  பகுதியை  வந்தடைந்தனர்

முற்றுகையிடப்பட்ட அஜோவ் உருக்கு ஆலையில் இருந்து குறைந்தது 173 பேர் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் பத்திரமாக உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு வந்தடைந்ததாக உக்ரைன் அதிகாரி கூறியுள்ளார். இந்த நடவடிக்கையின் போது மூன்று வீரர்கள் கொல்லப்பட்டனர், மேலும் ஆறு பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி ரஷியா போர் தொடுத்தது. முதலில் அந்த நாட்டின் ராணுவ கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்போவதாக அறிவித்த ரஷியா பின்னர் தாக்குதல் வரம்பை விரிவுபடுத்தியது. குடியிருப்பு கட்டிடங்கள், ஆஸ்பத்திரிகள், வெடிகுண்டு தவிர்ப்பு புகலிடங்கள் என எதுவுமே ரஷியாவின் தாக்குதல் இலக்குக்கு விதிவிலக்கு இல்லை என்ற நிலை வந்துள்ளது.

இந்த போர் இதுவரை 1 கோடியே 20 லட்சம் உக்ரைனியர்களை இடம் பெயர வைத்துள்ளது. 57 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்தப்போரில் எந்தப் பாவமும் அறியாத அப்பாவி பொதுமக்கள் கொன்று குவிக்கப்படுவது தொடர்கதையாய் நீளுகிறது.

நாஜிக்களின் ஜெர்மனியை 2-ம் உலகப்போரின் போது வென்றதன் வெற்றி தினத்தை ரஷியா இன்று கொண்டாடுகிறது. அதற்கு முன் குறிப்பிடத்தக்க வெற்றியை உக்ரைனில் பெற்றாக வேண்டும் என்று போரைத் தீவிரப்படுத்தி உள்ளது.

தலைநகர் கீவை கைப்பற்ற முடியாத நிலையில். ரஷியாவின் பார்வை கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியின் மீது தீவிரமாய் விழுந்துள்ளதால் அங்கு உக்கிரமான சண்டை நடந்து வருகிறது.

இந்த நிலையில், லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள பிலோஹோரிவ்கா என்ற இடத்தில் பள்ளிக்கூட கட்டிடம் மீது ரஷிய போர் விமானங்கள் நேற்று முன்தினம் குண்டு வீச்சு நடத்தின. அப்போது அந்தப் பள்ளிக்கூட கட்டிடத்தில் பொதுமக்கள் 90 பேர் தஞ்சம் அடைந்து இருந்தனர்.

இந்த குண்டுவெடிப்பில் பள்ளி கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலியானது உறுதியாகி இருக்கிறது. மேலும் 60 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

30 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த தகவல்களை லுஹான்ஸ்க் கவர்னர் செர்ஹி ஹைடாய் தெரிவித்துளளார். ரஷிய போர் விமானம் நடத்திய குண்டுவீச்சில் பள்ளிக்கூட கட்டிடம் தீப்பிடித்து கீழே விழுந்து, அந்தத் தீயை தீயைணப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி அணைத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதே லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள ஷைபிலோவோ என்ற கிராமத்தில் ரஷிய தாக்குதலில் சிக்கி 11 பேர் படுகாயம் அடைந்தததாக தகவல்கள் கூறுகின்றன.

போபாஸ்னா பகுதியில் கடும் சண்டை நடந்து வருகிறது. உக்ரைனிய படைகள் அங்கிருந்து பின்வாங்கி வருவதாகவும், நகரம் முழுவதும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் கவர்னர் செர்ஹி ஹைடாய் தெரிவித்தார்.

ஒடேசா அருகே உக்ரைன் கடற்படை கப்பலை ஒரே இரவில் டராண்டுல் ஏவுகணை தாக்குதலில் ரஷியா அழித்தது.

போர் தொடங்கிய நாள்தொட்டு இதுவரை 20-க்கும் மேற்பட்ட பள்ளிகள், கல்லூரிகள் தாக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டுகிறது. இதுபற்றி அதிபர் ஆலோசகர் டாரியா ஹெராசிம்சுக் குறிப்பிடும்போது, ரஷிய போர் குழந்தைகளுக்கு எதிரான போராகி இருக்கிறது என கூறினார்.

இதுவரை இந்தப் போரில் 225 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளன. 413 பேர் படுகாயம் அடந்துள்ளனர். கிழக்கு டான்பாஸ் பிராந்தியம் முழுவதும் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரஷிய ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள அனாதை இல்லங்களில் இருந்து குழந்தைகளை திருப்பி அனுப்ப சர்வதேச உதவியை உக்ரைன் அரசு கோரி உள்ளது.

மரியுபோல் நகரத்தின் கோட்டை போல விளங்கி வந்த அஜோவ் உருக்காலையில் இருந்த பெண்களையும், குழந்தைகளையும் பத்திரமாக வெளியேற்றுவது முடிந்துள்ளதாக உக்ரைன் மற்றும் ரஷியா அறிவித்துள்ளன. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக தொடங்கிய இந்தப் பணியை ஐ.நா.சபையும், செஞ்சிலுவை சங்கமும் ஒன்றிணைந்து மேற்கொண்டன. 300 பேர் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

அதே நேரத்தில் அந்த ஆலையின் சுரங்கங்களில், பதுங்கு குழிகளில் உக்ரைன் படை வீரர்கள் உள்ளனர். அவர்களை பத்திரமாக வெளியேற்ற ராஜ்ய ரீதியிலான முயற்சிகள் தொடர்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

மரியுபோல் அஜோவ் உருக்காலையில் நேற்று காணொலிக்காட்சி வழியாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ராணுவ உயர் அதிகாரி இல்லியா சமோலென்கோ, “சரண் அடைவது எங்கள் விருப்பம் அல்ல. ஏனென்றால் ரஷியா எங்கள் உயிர்கள் மீது அக்கறை காட்டவில்லை. சரண் அடைவது ஏற்கத்தக்கதல்ல. எதிரிக்கு இவ்வளவு பெரிய பரிசை வழங்க முடியாது. பிடிபடுவது என்றால் நாங்கள் இறந்து விட்டோம் என்றே அர்த்தம்” என குறிப்பிட்டார்.

Next Story