இலங்கையில் நாளை காலை 7 மணி வரை ஊரடங்கு நீட்டிப்பு


image courtesy: Reuters via ANI
x
image courtesy: Reuters via ANI
தினத்தந்தி 9 May 2022 7:43 PM GMT (Updated: 9 May 2022 7:43 PM GMT)

இலங்கையில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை காலை 7 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு,

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. ராஜபக்சே குடும்பத்தினர் தவறான முடிவுகளே இந்த நிலைக்கு காரணம் என கூறி எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி ஒரு மாதமாக தெருமுனை போராட்டங்கள் நடந்து வருகின்றன.

தொடர் போராட்டங்களின் எதிரொலியால் அரசியல் குழப்பத்துக்கு முடிவு கட்ட பிரதமர் பதவியில் இருந்து விலக முடிவு செய்த மகிந்த ராஜபக்சே, நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே, இலங்கையின் குருங்கலாவில் உள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சே வீட்டின்மீது போராட்டக்காரர்கள் திடீர் தாக்குதல் நடத்தி தீ வைத்தனர். 

ஆளுங்கட்சியினரின் வீடுகளுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இலங்கையில் மறு உத்தரவு வரும் அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்படுவதாக இலங்கை ரெயில்வே அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இலங்கையில் நிலவி வரும் பதற்றத்தை தணிக்கும் வகையில் தற்போது அங்கு அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை நாளை (11.05.2022) காலை 7 மணி வரை நீட்டிப்பு செய்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.

Next Story