டொனால்ட் டிரம்ப் மீதான டுவிட்டர் தடை திரும்பப் பெறப்படும்..!! - எலான் மஸ்க் அறிவிப்பு + "||" + Tesla chief Elon Musk says he would reverse Twitter's ban on Donald Trump
டொனால்ட் டிரம்ப் மீதான டுவிட்டர் தடை திரும்பப் பெறப்படும்..!! - எலான் மஸ்க் அறிவிப்பு
டொனால்ட் டிரம்ப் மீதான டுவிட்டர் தடையை திரும்பப் பெறப்போவதாக டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனவரி 6ம் தேதி நடந்த வன்முறையைத் தொடர்ந்து, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. மேலும், அவருடைய டுவிட்டர் உள்பட தவறான தகவல்களைப் பகிர்ந்ததற்காக, 70,000க்கும் மேற்பட்ட டுவிட்டர் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து டுவிட்டரின் தலைமை நிதி அதிகாரி நெட் செகல், டிவிட்டரை பயன்படுத்த டொனால்ட் டிரம்பிற்கு ஒரு போதும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று கூறி இருந்தார். இந்த சூழலில் தடை செய்யப்பட்ட அவரது டுவிட்டர் கணக்கை மீட்டெடுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. டொனால்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு மீதான தடையை நீக்கக் கோரிய மனு மீதான வழக்கை விசாரித்த நீதிபதி, டிரம்ப் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனால் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பால் டுவிட்டரை பயன்படுத்த முடியாத நிலை தொடர்ந்து நீடித்து வந்தது.
இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் டுவிட்டர் மீதான தடை திரும்பப் பெறப்படும் என டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.