அர்ஜென்டினாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்


அர்ஜென்டினாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
x
தினத்தந்தி 11 May 2022 1:48 AM GMT (Updated: 11 May 2022 1:48 AM GMT)

அர்ஜென்டினாவில் ரிக்டர் அளவில் 6.6 என்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அர்ஜென்டினா,

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவின் ஜூஜூய் மாகாணத்தில் இன்று அதிகாலை 4:36 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகியுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. 

இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை. அதேபோல பொருள் தேசம் குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.


Next Story