உக்ரைன் அகதிகளுடன் ஐநா பொதுச்செயலாளர் சந்திப்பு


உக்ரைன் அகதிகளுடன் ஐநா பொதுச்செயலாளர் சந்திப்பு
x
தினத்தந்தி 11 May 2022 4:21 AM GMT (Updated: 11 May 2022 4:21 AM GMT)

ரஷியாவின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டு மக்கள் பலர் அண்டை நாடான மால்டோவாவில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.


உக்ரைன் நாட்டின் அண்டை நாடான மால்டோவாவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டனியோ கட்டரெஸ் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

இந்த சுற்றுப்பயணத்தின் போது, ரஷியாவின் தாக்குதல் காரணமாக உக்ரைனில் இருந்து வெளியேறி மால்டோவாவில் அகதிகளாக குடியேறியவர்களை ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அண்டனியோ கட்டர்ஸ் சந்தித்தார். மேலும், அகதிகள் வசிக்கும் வீடுகளையும் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.  

அகதிகள் நெருக்கடியை சமாளிக்க மால்டோவா நாட்டிற்கு ஐநா கூடுதல் ஆதரவை அளிக்கும் என்று அண்டனியோ கட்டர்ஸ், மால்டோவா நாட்டு அதிபரிடம் உறுதி அளித்தார். ஐரோப்பியாவில் உள்ள ஏழ்மையான நாடுகளில் ஒன்றான மால்டோவாவில், இதுவரை 4 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உக்ரைனியர்கள் அதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். 

Next Story