மகிந்த ராஜபக்சேவை கடற்படை தளத்திற்கு அழைத்துச் சென்றது ஏன்? இலங்கை பாதுகாப்புத்துறை விளக்கம்


மகிந்த ராஜபக்சேவை கடற்படை தளத்திற்கு அழைத்துச் சென்றது ஏன்? இலங்கை பாதுகாப்புத்துறை விளக்கம்
x
தினத்தந்தி 11 May 2022 8:29 AM GMT (Updated: 2022-05-11T13:59:29+05:30)

ராஜபக்சே வெளிநாடு தப்பிச்செல்லலாம் எனவும் அந்நாட்டு ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளியாகின

கொழும்பு,

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பமே காரணம் என்று குற்றம் சாட்டிய இலங்கை மக்கள் அதிகாரத்தில் இருந்து ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலகக்கோரி    ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் போராடி வருகின்றனர்.

இரண்டு தினங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்களின் கூடாரங்களை கிழித்தெறிந்து தாக்குதல் நடத்தினர். இதனால் அவர்கள் மீது போராட்டக்காரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். 

இது பெரும் கலவரமாக மாறியது. ராகிந்தா ராஜபக்சே பதவி விலகியுள்ளார். இருப்பினும் பல இடங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறன்றன. சில இடங்களில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் பலர் காயமடைந்தனர். இதனால் இலங்கையே பற்றி எரிகிறது. முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் பாரம்பரிய வீடு தீவைத்து எரிக்கப்பட்டது.  

பிரதமர் பதவியில் இருந்து விலகியதால், அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்சே குடும்பத்துடன் வெளியேறினார். ராஜபக்சே தற்போது கடற்படை தளத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளார். ராஜபக்சே வெளிநாடு தப்பிச்செல்லலாம் எனவும் அந்நாட்டு ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளியாகின. ஆனால்,  மகிந்த ராஜபக்சே தரப்பில் இந்த தகவல் திட்டவட்டமாக மறுக்கப்படுகிறது. 

இந்த நிலையில், மகிந்த ராஜபக்சே கடற்படை தளத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டது ஏன்? என்பதற்கு இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சக செயலர் கமல் குணரத்னே விளக்கம்  அளித்துள்ளார். இது தொடர்பாக அவர்  கூறும் போது, “ இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே பாதுகாப்பிற்காக கடற்படை தளத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார். மகிந்தாவின் அதிகாரப்பூர்வ இல்லம் தாக்கப்பட்டதையடுத்து கடற்படை தளத்துக்கு அழைத்து சென்றோம். நிலமை சீரானது மகிந்த ராஜபக்சே விரும்பும் இடத்திற்கு அழைத்து செல்லப்படுவார்” என்றார். 


Next Story