உலக செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியை ஊக்குவிக்க இந்தியா நிதி + "||" + India funds to promote India at the United Nations

ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியை ஊக்குவிக்க இந்தியா நிதி

ஐக்கிய நாடுகள் சபையில்  இந்தியை ஊக்குவிக்க இந்தியா நிதி
ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியை ஊக்குவிக்க இந்தியா 8 லட்சம் அமெரிக்க டாலர் நிதி வழங்கியுள்ளது.
நியூயார்க்,

ஐக்கிய நாடுகள் சபையில்  இந்தி மொழியை ஊக்குவிக்க இந்தியா 8 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 6.18 கோடி ரூபாய்) நிதியை வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக நியூயார்க்கில் உள்ள ஐநா சபைக்கான இந்திய தூதரகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஐநா அவை செய்திகளை இந்தியில் மொழிபெயர்த்து உலகம் முழுவதும் இந்தி பேசும் லட்சக்கணக்கானோரிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

இதற்காக ஐநாவின் உலகளாவிய தகவல் தொடர்பு துறை துணை இயக்குனர் மிடா ஹோசலியிடம், 8 லட்சம் அமெரிக்க டாலருக்கான காசோலையை ஐநாவிற்கான இந்திய தூதர் ரவீந்திரா வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.