ரஷியாவும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தை நடத்தினால் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர முடியும்: இத்தாலி பிரதமர்


ரஷியாவும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தை நடத்தினால் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர முடியும்: இத்தாலி பிரதமர்
x
தினத்தந்தி 11 May 2022 4:52 PM GMT (Updated: 11 May 2022 4:52 PM GMT)

மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் உதவ அனைவரும் முயற்சி செய்ய வேண்டும்.

ரோம்,

உக்ரைனில் நடக்கும் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்காவும் ரஷ்யாவும் பரஸ்பரம் பேச வேண்டும் என்று இத்தாலிய பிரதமர் மரியோ ட்ராகி கூறினார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை நேற்று இத்தாலிய பிரதமர் மரியோ ட்ராகி சந்தித்து பேசிய நிலையில், இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

அமைதிக்கான பாதை மிகவும் சிக்கலானது என்பதை நானும் அதிபர் ஜோ பைடனும் உணர்ந்துள்ளோம். ஆனால், மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் உதவ அனைத்து கூட்டணி நாடுகளும் முயற்சி செய்ய வேண்டும்.

அதற்கான பல சாத்தியங்கள் உள்ளன. ஆனால் நாம் அந்த நிலைக்கு வருவதற்கு முன், முயற்சி செய்யப்பட வேண்டும். அனைத்து கூட்டணி நாடுகளும் செய்ய வேண்டிய முயற்சி உள்ளது. குறிப்பாக ரஷ்யா மற்றும் அமெரிக்கா, பரஸ்பரம் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story