4-வது டோஸ் தடுப்பூசி வலுவான நோய் எதிர்ப்புச்சக்தியை தரும் - ஆய்வு முடிவு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 11 May 2022 7:14 PM GMT (Updated: 2022-05-12T00:44:51+05:30)

4-வது டோஸ் தடுப்பூசி வலுவான நோய் எதிர்ப்புச்சக்தியை தரும் என்று ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.

லண்டன், 

கொரோனாவுக்கு எதிராக 2 டோஸ் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. அதன் பின்னர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி ஒன்று போடப்படுகிறது. ஆனால் இங்கிலாந்தில் 3-வது பூஸ்டர் டோஸ் மட்டுமின்றி, வசந்த காலத்தையொட்டி 4-வது பூஸ்டர் டோசும் போடப்படுகிறது. இது அதிக பாதிப்புக்கு ஆளாகிற நிலையில் உள்ளவர்களுக்கு போடப்படுகிறது. அதிகளவு நோய் எதிர்ப்புச்சக்தியை பராமரிப்பதற்காக இந்த 4-வது டோஸ், முன் எச்சரிக்கை உத்தியாக அங்கு பின்பற்றப்படுகிறது.

இந்த நிலையில் 4-வது டோஸ் தடுப்பூசியாக (அதாவது, 2-வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக) பைசர் அல்லது மாடர்னா தடுப்பூசியை செலுத்திக்கொள்கிறபோது, அது வலுவான நோய் எதிர்ப்புச்சக்தியை தருகிறது என்பது நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுபற்றிய கூடுதல் தகவல்கள் ‘தி லேன்செட்’ தொற்றுநோய் பத்திரிகையில் வெளியாகி உள்ளன.

Next Story