கொரோனாவில் இருந்து குணமடைந்தவரா நீங்கள்?ஆய்வில் கூறும் உண்மை என்ன ?


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 13 May 2022 9:29 AM GMT (Updated: 2022-05-13T14:59:21+05:30)

கொரோனா பாதித்த பாதி பேர், பாதிப்புக்கு உள்ளான இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் எதாவது ஒரு நோய் அறிகுறியுடன் காணப்படுவது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

லண்டன்,

ஆரம்பத்தில் கொரோனா என்றதும் மக்கள்அலறியத்துக்கொண்டு ஒதுங்கினர். ஆனால் இன்று கொரோனா நம்மை என்ன செய்து விட போகிறது என்ற மனோபாவம் அனைவரிடத்திலும் காணப்படுகிறது... இருந்த போதும், அவ்வப்போது வெளியாகும் ஆய்வு முடிவுகள் கொரோனா குறித்த அச்சத்தை  மக்கள் மனதில் விதைத்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், பிரிட்டனை சேர்ந்த மருத்துவ ஆய்வு நிறுவனமான லான்செட், தற்போது வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு... கொரோனா குறித்து அலட்சியம் வேண்டாம் என நம்மை எச்சரிக்கிறது.

இங்கிலாந்தில் கொரோனா பாதித்த நான்கில் ஒருவர் ஓராண்டிற்கு பிறகே முழுமையாக குணமடைந்ததை உணர்கின்றனர். அதுவும் கொரோனா பாதித்த பிறகு நல்ல தூக்கத்திற்கு போராட வேண்டி உள்ளதாக அந்த ஆய்வு முடிவுகள் கூறுகிறது.

தூக்கமின்மை, உடல் சோர்வு, தசை வலி, மூச்சுத்திணறல், அஜீரணக்கோளாறு போன்ற ஏதாவது ஒரு அறிகுறி தோன்றுகிறது. கொரோனாவில் இருந்து குணமடைந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் ஏதாவது ஒரு அறிகுறிகள் தொடர்வதாக லான்செட் ஆய்வுகள் கூறுகிறது. 

இது இப்படியே நீளும் என்றால், நிச்சயம் இல்லை என்கின்றனர் மருத்துவர்கள். படிப்படியாக கொரோனாவிலிருந்து குணமடைந்துவிடுவார்கள் என்பது மருத்துவர்கள் கூறும் தகவலாக உள்ளது.


Next Story