பாகிஸ்தானில் வேன் மீது லாரி மோதி விபத்து - 12 பேர் உயிரிழப்பு


பாகிஸ்தானில் வேன் மீது லாரி மோதி விபத்து - 12 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 13 May 2022 11:41 PM GMT (Updated: 2022-05-14T05:11:22+05:30)

வேன்களில் பயணம் செய்த ஒரு சிறுமி உள்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் குஜ்ரன்வாலா நகரில் சாலையில் அதிவேகத்தில் சென்ற குப்பை லாரி ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த 2 வேன்கள் மீது அடுத்தடுத்து மோதியது. 

இந்த கோர விபத்தில் 2 வேன்களில் பயணம் செய்த ஒரு சிறுமி உள்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய டிரைவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story