ஆஸ்திரேலிய கடல் எல்லையில் சீனாவின் உளவு கப்பல் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 14 May 2022 12:34 AM GMT (Updated: 14 May 2022 12:34 AM GMT)

சீனாவின் உளவு கப்பல் தங்கள் நாட்டின் கடல் எல்லை அருகே அத்துமீறி நுழைந்தது கண்டிக்கத்தக்கது என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

சிட்னி,

ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள புரூம் நகருக்கு அருகே கடலில் சீனாவின் உளவு கப்பல் அத்துமீறி நுழைந்ததாக ஆஸ்திரேலியா அரசு குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இது ஒரு ஆத்திரமூட்டும் செயல் என கூறி சீனாவை கண்டித்துள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறுகையில், சீன கப்பல் ஆஸ்திரேலிய கடல் எல்லைக்குள் நுழையவில்லை என்றாலும், அது உளவு பார்ப்பதற்காக அங்கே வந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை என தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன், இந்த சீன கப்பல் ஆஸ்திரேலியாவின் கடல் எல்லையை கண்காணிக்கும் நோக்கத்துடன் வந்தது என உறுதியாக கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவின் ராணுவம் மற்றும் பாதுகாப்பு தளவாடங்கள் உள்ள இடத்திற்கு மிக நெருக்கமாக இந்த சீன கப்பல் வந்து சென்றது கண்டிக்கத்தக்கது என அவர் கூறியுள்ளார். இருப்பினும் இந்த சம்பவம் குறித்து சீனா இதுவரை அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story