தென் ஆப்பிரிக்காவில் கொரோனா அலை - தினமும் 8 ஆயிரம் பேருக்கு தொற்று


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 14 May 2022 8:16 PM GMT (Updated: 14 May 2022 8:16 PM GMT)

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 3 வாரங்களாகவே தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

ஜோகன்னஸ்பர்க், 

தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான், அதன் துணை வைரஸ்களால் தூண்டப்பட்ட கொரோனா அலை வீசுகிறது. கடந்த 3 வாரங்களாகவே அங்கு தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆஸ்பத்திரி சேர்க்கையும் அதிகரிக்கிறது. 

ஆனால் தீவிர பாதிப்பும், மரணங்களும் அதிகரிக்கவில்லை.கடந்த மாத தொடக்கத்தில் தினமும் சராசரியாக 300 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. தற்போது சராசரியாக நாளும் 8 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியாகி வருகிறது. பெரும்பாலும் தற்போது தொற்று உறுதி செய்யப்படுகிற பலருக்கும் பிஏ.4 மற்றும் பிஏ.5 பாதிப்புதான் அதிகளவில் கண்டறியப்படுகிறது. 

ஆனாலும் பெரும்பாலோர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதால் தொற்றின் தீவிர பாதிப்பில் இருந்தும், ஆஸ்பத்திரி சேர்க்கையில் இருந்தும், மரணத்தில் இருந்தும் தங்களைக் காத்துக்கொள்கிறார்கள் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story