இலங்கைக்கு இதுவரை இந்தியா 4 லட்சம் டன் டீசல் அனுப்பியது - தூதரகம் தகவல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 15 May 2022 7:29 PM GMT (Updated: 2022-05-16T00:59:30+05:30)

இலங்கைக்கு இதுவரை 4 லட்சம் டன் டீசல் அனுப்பியுள்ளதாக இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.

கொழும்பு, 

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகிறது. இதில் கடன் எல்லை மற்றும் கடன் மாற்று திட்டங்கள் மூலம் 3 பில்லியன் டாலருக்கு மேல் கடனுதவி வழங்கி இருக்கிறது. அத்துடன் கடன் எல்லைக்கு உட்பட்டு டீசலும் வழங்கப்பட்டு வருகிறது. 

இதில் கடைசியாக நேற்றும் இந்தியா வழங்கிய டீசலுடன் கப்பல் ஒன்று இலங்கை போய் சேர்ந்து உள்ளது. இதையும் சேர்த்து இந்தியா இதுவரை 4 லட்சம் டன்னுக்கு மேல் இலங்கைக்கு டீசல் உதவி வழங்கியிருப்பதாக கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் கூறியுள்ளது.


Next Story