அமெரிக்காவில் சர்ச் ஒன்றில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி 4 பேர் காயம்


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 16 May 2022 2:02 AM GMT (Updated: 2022-05-16T07:32:34+05:30)

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சர்ச் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

கலிபோர்னியா,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து தென்கிழக்கே 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாகுனா வூட்ஸ் பகுதியில் ஜெனீவா பிரஸ்பைடிரியன் சர்ச் ஒன்று உள்ளது.

இந்த நிலையில் நேற்று மதியம் சுமார் 1.30 மணியளவில் இந்த சர்ச்சில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் தெரியவில்லை. 

இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஒருவரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தனர். அவரிடமிருந்து ஆயுதம் ஒன்றை மீட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃபேலோ நகரில் செயல்பட்டு வரும் சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்த நிலையில் தொடர்ந்து சர்ச்சில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story