"ரணகளத்துலயும் ஒரு கிளு கிளுப்பு" 69 வயதில் தந்தையாகும் ரஷிய அதிபர் புதின்...!


ரணகளத்துலயும் ஒரு கிளு கிளுப்பு 69 வயதில் தந்தையாகும் ரஷிய அதிபர் புதின்...!
x
தினத்தந்தி 16 May 2022 9:52 AM GMT (Updated: 2022-05-16T15:22:34+05:30)

ரஷிய அதிபர் புதினின் 38 வயது ரகசிய காதலி அலினா கபேவா மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

மாஸ்கோ

விளாடிமிர் புதின் 69 வயதில் தந்தையாக போவதாக தகவல்கள் தொடர்ந்து வெளிவரும் நிலையில் அவரின் குழந்தையை வயிற்றில் சுமக்கும் பெண் குறித்த சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.38 வயது ரகசிய காதலி அலினா கபேவா மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் நடவடிக்கை பிப்ரவரி மாத இறுதியில் துவங்கியது. போரானது 90 நாட்களை நெருங்கி கொண்டிருக்கிறது. இந்த பரபரப்புக்கு இடையில் புதினின் ரகசிய காதலியான அலினா கபேவா (38) கர்ப்பமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புடின்-அலினா கபேவா ஆகியோருக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ளதாக (வெளிப்படையாக அறிவிக்கவில்லை) கூறப்படும் நிலையில் தான் அலினா கபேவா கர்ப்பமாகி உள்ள செய்திகள் பரவுகின்றன.

இதுபற்றி ரஷியாவின் செய்தி நிறுவனம் ஒன்றும் செய்தி வெளியிட்டுள்ளது. இதை பார்த்த 69 வயதான புதின் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தி கார்டியன் போன்ற பல செய்தி நிறுவனக்கள்  அலினா புதினின் காதலி என்று கூறியுள்ளன. இருப்பினும், அதிபர் விளாடிமிர் புதின் இதை ஒருபோதும் பகிரங்கமாக ஒப்புக் கொள்ளவில்லை. பொது இடங்களில் அலினா அரிதாகவே காணப்படுகிறார். அவர் கடைசியாக டிசம்பர் 2021 இல் மாஸ்கோவில் நடந்த டிவைன் கிரேஸ் ரிதம் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் விளையாடினார்.

விளாடிமிர் புதின் 1983 இல் லியுட்மிலா அலெக்ஸாண்ட்ரோவ்னா ஓச்செரெட்னாயா என்பவரை  மணந்தார். 30 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த பின்னர் இருவரும் 2014 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். புதினுக்கும் லியுட்மிலாவுக்கும் மரியா புதினா மற்றும் கேதரினா டிகோனோவா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். மரியா 1985 இல் லெனின்கிராட்டில் பிறந்தார் மற்றும் கேடரினா 1986 இல் ஜெர்மனியில் பிறந்தார். புதினிடமிருந்து பிரிந்த பிறகு, லியுட்மிலா தன்னை விட 21 வயது இளைய தொழிலதிபரை மணந்து கொண்டார்.

யார் இந்த அலினா கபேவா ?

அலினா கபேவா கடந்த 2004 ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் தங்கம் வென்றார். ஒலிம்பிக்கில் மொத்தம் 2 பதக்கம் வென்ற இவர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 9 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் வென்றுள்ளார்.

புதினின் ஐக்கிய ரஷ்யா கட்சியில் 2007 முதல் 2014 வரை எம்பியாக இருந்தார். கிரெம்ளின் சார்பு ஊடக குழுவான தேசிய மீடியா குழு இயக்குனர்களின் தலைவராகவும் 7 ஆண்டுகளாக செயல்பட்டார்.

அப்போது ஆண்டுக்கு கிட்டத்தட்ட 8 மில்லியன் டாலர்கள் அளவுக்கு அவருக்கு சம்பளம் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் விளாடிமிர் புதின் தனது மனைவி லியுத்மிலாவை 2014ல் விவாகரத்து செய்தார். இந்த விவாகரத்துக்கும் அலினா கபேவா தான் காரணம் என கூறப்பட்டது.

சர்ச்சைகளுக்கு பெயர் போன அலினாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 77 ஆயிரம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story