ரெனால்ட் நிறுவனத்தின் சொத்துக்களை வாங்கிய ரஷியா..!


ரெனால்ட் நிறுவனத்தின் சொத்துக்களை வாங்கிய ரஷியா..!
x
தினத்தந்தி 16 May 2022 3:11 PM GMT (Updated: 16 May 2022 3:11 PM GMT)

ஐரோப்பாவுக்கு அடுத்தபடியாக ரெனால்ட் நிறுவனத்திற்கு மிகப்பெரிய சந்தையாக ரஷியா விளங்கி வருகிறது.

மாஸ்கோ,

உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதித்தன. ரஷியாவில் இயங்கி வந்த கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது உற்பத்தியை நிறுத்தின. 

அந்த வகையில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் ரஷியாவை விட்டு வெளியேறியது.  இதையடுத்து ரஷியாவில்  உள்ள ரெனால்ட் நிறுவனத்தின் சொத்துக்களை  ரஷியா வாங்கியுள்ளது.  ரெனால்ட் நிறுவனமும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. 

ஐரோப்பாவுக்கு அடுத்தபடியாக ரெனால்ட் நிறுவனத்திற்கு மிகப்பெரிய சந்தையாக ரஷியா விளங்கி வருகிறது.

Next Story