பிரான்ஸ் புதிய பிரதமராக எலிசபெத் போர்னி நியமனம்


Image Courtesy: AFP
x
Image Courtesy: AFP
தினத்தந்தி 16 May 2022 8:36 PM GMT (Updated: 2022-05-17T02:06:58+05:30)

பிரான்ஸ் வரலாற்றில் பெண் ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

பாரிஸ்,

பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற இம்மானுவேல் மேக்ரான் 2-வது முறையாக அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.

இதற்கிடையில், பிரான்ஸ் பிரதமர் ஜீன் கெஸ்ட்க்ஸ் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இம்மானுவேல் மேக்ரான் 2-வது முறையாக பொறுப்பேற்ற பின்னர் அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், பிரதமர் ஜீன் கெஸ்ட்க்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து எலிசபெத் போர்னி புதிய பிரதமராக நியமனம் செய்யபட்டுள்ளார். 

பிரான்ஸ் வரலாற்றில் பெண் ஒருவர்  நாட்டின் பிரதமராக நியமிக்கப்படுவது இது 2-வது முறையாகும்.  

Next Story