அமெரிக்கா: மதவழிபாட்டு தலத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்? - பகீர் பின்னணி


Image Courtesy: AFP
x
Image Courtesy: AFP
தினத்தந்தி 16 May 2022 10:44 PM GMT (Updated: 16 May 2022 10:44 PM GMT)

அமெரிக்காவில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலமான சர்ச்சில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணம் லஹூன வுட்ஸ் நகரில் உள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டு தலமான சர்ச்சில் கடந்த ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது.

துப்பாக்கியுடன் சர்ச்சிக்குள் நுழைந்த நபர் அங்கு இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இதனை தொடந்து, துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சர்ச்சில் இருந்தவர்களை மடக்கி பிடித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் சீனாவை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பகுதியில் வசித்து வந்த சீனாவை சேர்ந்த 68 வயதான டேவிட் சோவ் (68) என்பது தெரியவந்தது. தைவானை சேர்ந்தவர்கள் மீதான வெறுப்புணர்வு காரணமாகவே இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story