பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்..!


பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்..!
x
தினத்தந்தி 17 May 2022 2:50 AM GMT (Updated: 2022-05-17T08:20:23+05:30)

இலங்கையில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதிவேற்றபின் முதல் முறையாக நாடாளுமன்றம் இன்று கூடுகிறது


கொழும்பு,

கொரோனா பெருந்தொற்றுக்கு பின் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே கடந்த 9ந்தேதி விலகினார். அவருடைய ஆதரவாளர்களின் தாக்குதலுக்கு பதிலடியாக பல பகுதிகளில் கலவரம் வெடித்தது.

இந்த சூழலில் இலங்கையின் பிரதமராக 6-வது முறையாக பதவியேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கே, நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பத்துக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டு உள்ளார்.

இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. இலங்கையில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதிவேற்றபின் முதல் முறையாக நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.இது மிகவும் முக்க்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது .

Next Story