ரஷியா-உக்ரைன் போர் எதிரொலி; துருக்கியின் கப்பல் போக்குவரத்துத் துறை கடும் பாதிப்பு


ரஷியா-உக்ரைன் போர் எதிரொலி; துருக்கியின் கப்பல் போக்குவரத்துத் துறை கடும் பாதிப்பு
x
தினத்தந்தி 17 May 2022 1:58 PM GMT (Updated: 17 May 2022 1:58 PM GMT)

ரஷியா மீது சர்வதேச நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடை, துருக்கியின் வர்த்தக சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்காரா,

கருங்கடலின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள துருக்கி, ஆண்டுதோறும் தனது அண்டை நாடுகளாக ரஷியா மற்றும் உகரைனில் இருந்து பெருமளவில் எரிசக்தி மற்றும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்கிறது. 2021-ம் ஆண்டு துருக்கியில் 39 சதவீதத்திற்கும் மேற்பட்ட எண்ணெய், 45 சதவீத இயற்கை எரிவாயு மற்றும் 64 சதவீதத்திற்கும் அதிகமாக கோதுமை ஆகியவை ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. 

இந்த நிலையில் தற்போது ரஷியா-உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள போர், துருக்கியின் கப்பல் போக்குவரத்துத் துறையை கடுமையாக பாதித்துள்ளது. ரஷியா மீது சர்வதேச நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடை, துருக்கியின் வர்த்தக சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சரக்கு போக்குவரத்துக்கான தடை, போக்குவரத்து செலவு அதிகரிப்பு, எரிசக்தி மற்றும் மூலப்பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட சவால்களை துருக்கி அரசு தற்போது சந்தித்து வருகிறது. இந்த நெருக்கடி தொடர்ந்தால் சிறிய கப்பல் நிறுவனங்களை மூட வேண்டிய அபாயம் ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கடந்த ஆண்டு முதல் துருக்கியில் விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் பணவீக்க விகிதம் 70 சதவீதத்தை நெருங்கியது குறிப்பிடத்தக்கது.  

Next Story