இரவு விடுதியில் சிறுவர்கள் மர்ம மரணம்; பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு


இரவு விடுதியில் சிறுவர்கள் மர்ம மரணம்; பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு
x

Image Courtesy: AFP

தென் ஆப்பிரிக்காவில் உள்ள இரவு விடுதியில் சிறுவர்கள் 21 பேர் மர்மான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜோகனர்ஸ்பெர்க்,

தென் ஆப்பிரிக்காவின் தெற்கு நகரான கிழக்கு லண்டனில் இரவு விடுதியில் ஒன்று உள்ளது. இந்த இரவு நேர விடுதிக்கு நேற்று இரவு பள்ளிச்சிறுவர்கள் சிலர் வந்துள்ளனர்.

பள்ளி தேர்வு முடிந்ததை கொண்டாடும் விதமாக அவர்கள் இரவு விடுதிக்கு வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் இரவு விடுதியில் மது குடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், விடுதிக்கு வந்த சிறுவர்கள் 21 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் வயது 13 முதல் 17 வரை ஆகும். சிறுவர்கள் குடிந்த மதுவில் விஷம் எதுவும் கலந்து கொடுக்கப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story