அமெரிக்கா: தலையில் குண்டு பாய்ந்தது காருக்குள் உயிருக்கு போராடிய இந்தியர் உயிரிழப்பு


அமெரிக்கா: தலையில் குண்டு பாய்ந்தது காருக்குள் உயிருக்கு போராடிய இந்தியர் உயிரிழப்பு
x

அமெரிக்காவில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் காருக்குள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இந்தியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வாஷிங்டன்,

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 25 வயதான சாய் சந்திரன் என்ற இளைஞர் அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணம் காடன் அவன்யூ பகுதியில் வசித்து வருகிறார்.

இவர் கடந்த திங்கட்கிழமை அதிகாலை தனது காரில் தலையில் குண்டு பாய்ந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தலையில் குண்டு பாய்ந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சாய் சந்திரனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் சாய் சந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சாய் சந்திரன் உயிரிழப்பிற்க்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை யாரேனும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்றனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story