கனடாவில் கைத்துப்பாக்கி உரிமைகள் தடுக்கப்படும்: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு


கனடாவில் கைத்துப்பாக்கி உரிமைகள் தடுக்கப்படும்: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு
x

கனடாவில் கைத்துப்பாக்கி உரிமைகள் தடுக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார்.

ஒட்டாவா,

அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து கானப்படுகிறது. இதனால், அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இதனால், அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் ஒழிய வேண்டும் என்பது அந்நாட்டு பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

இந்த நிலையில், பெருகி வரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை தடுக்க கனடா பிரதமர் புதிய அறிவிப்பை வெளியிட்டார். அதில் அவர் கனடாவில் கைத்துப்பாக்கி உரிமையை முடக்குவதாக அறிவித்தார்.

இது குறித்து ஒரு செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறும்போது, "கனடாவில் கைத்துப்பாக்கி உரிமைக்கான தேசிய முடக்கத்தை அமல்படுத்துவதற்கான சட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம். இதன் அர்த்தம் என்னவென்றால், இனி கனடாவில் எங்கும் கைத்துப்பாக்கிகளை வாங்கவோ, விற்கவோ, மாற்றவோ அல்லது இறக்குமதி செய்யவோ முடியாது. வேறுவிதமாகக் கூறினால், கைத்துப்பாக்கிகளுக்கான சந்தையை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம்" என்று அவர் கூறினார்

கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து ஒருவர் மீது ஒருவர் சுட்டும் துப்பாக்கிகளின் தனிநபர் விகிதம் கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் துப்பாக்கி குற்றங்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு கைத்துப்பாக்கிகள் சம்பந்தப்பட்டவை. துப்பாக்கி வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருவதாக ட்ரூடோ ஒப்புக்கொண்டார்.

இது தொடர்பாக ட்ரூடோ கருத்து தெரிவிக்கையில், "மக்கள் பல்பொருள் அங்காடி, பள்ளி அல்லது அவர்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு அச்சமின்றிச் செல்ல வேண்டும். தவறான தோட்டாவால் என்ன நடக்கும் என்பதைப் பற்றி மக்கள் இனி கவலைப்படாமல் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.



Next Story