ரஷியாவில் சரக்கு விமானம் தரையிறங்கும்போது விபத்து: 3 பேர் உயிரிழப்பு !


ரஷியாவில் சரக்கு விமானம் தரையிறங்கும்போது விபத்து: 3 பேர் உயிரிழப்பு !
x

கோப்புப்படம் 

ரஷியாவின் சரக்கு விமானம், ரியாசான் நகருக்கு அருகே தரையிறங்கும் போது தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.

மாஸ்கோ,

ரஷியாவை சேர்ந்த இலியுஷின் Il-76 என்ற சரக்கு விமானம் 9 பேருடன் ரஷியாவின் ரியாசான் நகருக்கு அருகே தரையிறங்க சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், விமானத்தில் இருந்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும் அதில் இருந்த 6 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்குள்ளான விமானத்தை எந்த அமைப்பு இயக்கியது என்பது ஒருமுறை தெளிவாகத் தெரியவில்லை.


Next Story