லண்டனில் வெடிவிபத்து; 5 பேர் காயம்


லண்டனில் வெடிவிபத்து; 5 பேர் காயம்
x

லண்டனில் வீட்டில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.

லண்டன்,

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் பக்கிங்ஹாம் கிங்ஸ்டண்டிங் பகுதியில் உள்ள வீட்டில் இன்று பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த வெடிவிபத்து காரணமாக வீட்டில் தீப்பிடித்தது. தீ மளமளமென அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் பற்றி எரிந்த தீயை நீண்ட போராட்டத்திற்கு பின் அணைத்தனர்.

ஆனாலும், இந்த விபத்தில் ஒரு வீடு முழுவதும் எரிந்து தீக்கிரையானது. மேலும், அருகில் இருந்த 5 வீடுகளும் தீ விபத்தால் பாதிப்புக்குள்ளானது.

இந்த தீ விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டது. தீக்காயம்பட்டவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் கியாஸ் எரிவாயு கசிவு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டு அதன் காரணமாக தீ வீடு முழுக்க பரவியிருக்கலாம் ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.


Next Story