5 கண்டங்கள், இந்தியா உள்பட பல நாடுகள், ஆண்டு கணக்கில் வேவு பார்த்த சீன உளவு பலூன்கள்...!


5 கண்டங்கள், இந்தியா உள்பட பல நாடுகள், ஆண்டு கணக்கில் வேவு பார்த்த சீன உளவு பலூன்கள்...!
x

சீன உளவு பலூனை அமெரிக்கா போர் விமானம் மூலம் சுட்டு வீழ்த்தியது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் மவுண்டானா மாகாணம் கஸ்ஹடி நகரில் அந்நாட்டு விமானப்படை தளம் உள்ளது. இந்த விமானப்படை தளத்தில் அணு ஆயுத ஏவுதளம் உள்ளது.

இந்த அணு ஆயுத ஏவுதளத்தின் வான்பரப்பில் பல அடி உயரத்தில் கடந்த 1-ம் தேதி வெள்ளை நிறத்திலான மிகப்பெரிய மர்ம பலூன் பறந்தது. இந்த பலூன் சீன உளவு பலூன் என்பது தெரியவந்தது.

அணு ஆயுத ஏவுதளத்தின் ரகசிய தகவல்களை சேகரிக்க சீனா இந்த ரகசிய உளவு பலூனை அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. வர்த்தக ரீதியிலான விமானங்கள் பறக்கும் உயரத்திற்கு அதிகமான உயரத்தில் அந்த உளவு பலூன் பறந்த நிலையில் அமெரிக்க பாதுகாப்பிற்கு இந்த பலூன் அச்சுறுத்தலாக விளங்கியது.

இதனை தொடர்ந்து சீன உளவு பலூனை கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க போர் விமானங்கள் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தின.

சுட்டு வீழ்த்தப்பட்ட உளவு பலூன் அட்லாண்டிக் கடலில் விழுந்தது. அட்லாண்டிக் கடலில் விழுந்த அந்த உளவு பலூனை அமெரிக்க கடற்படையினர் மீட்டு பலூனில் இருந்த கருவிகளை ஆய்வு செய்து வருகின்றனர். அதேவேளை சுட்டுவீழ்த்தப்பட்டது தங்கள் நாட்டை சேர்ந்த பலூன் என்றும் அந்த பலூன் வானிலை ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்டதாக சீனா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சீன உளவு பலூன் அந்நாட்டு விமானப்படையால் இயக்கப்பட்டு வருகிறது. இந்த உளவு பலூன்கள் 5 கண்டங்களை கடந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சீனாவால் இந்த உளவு பலூன்கள் இயக்கப்பட்டுள்ளன.

தென்சீன கடல்பகுதியில் சீனாவின் ஹைனன் மாகாணத்தில் இருந்து இயக்கப்பட்ட இந்த உளவு பலூன்கள் ஜப்பான், சீனா, வியட்நாம், தைவான், பிலிப்பைன்ஸ் போன்ற பல்வேறு நாடுகளின் ராணுவ தளம், ரகசிய இடங்களை இந்த உளவு பலூன் கண்காணித்துள்ளது என்று அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த (பெயர் குறிப்பிட விரும்பாத) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story