சீனாவில் லஞ்ச வழக்கில் கைதான மந்திரிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு


சீனாவில் லஞ்ச வழக்கில் கைதான மந்திரிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு
x

ஊழல் வழக்கில் சீன மந்திரிக்கு விதிக்கப்பட்ட மரண தண்ரனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.

பெய்ஜிங்,

சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கிய அங்கம் வகித்தவர் பூ செங்குவா. சீனாவின் முன்னாள் சட்டத்துறை மந்திரியாக இருந்த இவர், தனது பதவிக்காலத்தில் குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்து கொண்டு ரூ.58 கோடி வரையில் ஊழல் செய்ததாகவும், தனது குடும்பத்தினருக்கு சலுகைகள் செய்ததாகவும், தொழில் நிறுவனங்களுக்கு உதவ லஞ்சம் வாங்கியதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பான வழக்கு ஜிலின் மாகாணத்தில் உள்ள சாங்கன் நகர கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில், நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், செங்குவாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து பூ செங்குவா, தனது தண்டனையை குறைக்கும்படி கேட்டுக் கொண்டதையடுத்து, அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.


Next Story