டுவிட்டரை வாங்கும் திட்டத்தில் இருந்து பின்வாங்கி விடுவேன் - எலான் மஸ்க் எச்சரிக்கை


டுவிட்டரை வாங்கும் திட்டத்தில் இருந்து பின்வாங்கி விடுவேன் - எலான் மஸ்க் எச்சரிக்கை
x

டுவிட்டரை வாங்கும் திட்டத்தில் இருந்து பின்வாங்கி விடுவேன் என எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வாஷிங்டன்,

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் சமூகவலைதளமான டுவிட்டரை வாங்க முடிவு செய்துள்ளார். 44 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் விரைவில் முழுமையடைய உள்ளது.

அதேவேளை, டுவிட்டரை எலான் மஸ்கை டுவிட்டரிடம் ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

டுவிட்டரை வாங்கும் திட்டத்தில் இருந்து பின்வாங்கி விடுவேன் என எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார். டுவிட்டர் பயனாளர்கள் குறித்த தரவுகள், டுவிட்டரில் போலியாக உள்ள கணக்குகளின் எண்ணிக்கை, விவரங்கள் உள்ளிட்ட தரவுகளை தன்னிடம் டுவிட்டர் நிர்வாகம் தர மறுத்தால் டுவிட்டரை வாங்கும் திட்டத்தில் இருந்து பின்வாங்கி விடுவேன் என மஸ்க் தெரிவித்துள்ளார்.


Next Story