ஈஸ்வரனின் எம்.பி. பதவி ரத்து மசோதா: சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு தோல்வி


ஈஸ்வரனின் எம்.பி. பதவி ரத்து மசோதா: சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு தோல்வி
x

Image Courtesy : AFP

நாடாளுமன்றத்தில் நடந்த ரகசிய வாக்கெடுப்பில் எதிர்க்கட்சியினர் தீர்மானம் தோல்வி அடைந்தது.

சிங்கப்பூர்,

சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் ஈஸ்வரன். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் மீது கடந்த ஜூலை மாதம் ஊழல் குற்றச்சாட்டு வழக்கு பதியப்பட்டது. அதன்பேரில் சிங்கப்பூர் புலனாய்வு அதிகாரிகள் ஈஸ்வரனை கைது செய்தனர். தற்போது அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

விசாரணைக்கு ஏதுவாக அமையும் வகையில் ஈஸ்வரனின் எம்.பி. பதவியை பிரதமர் லீ இடைநீக்கம் செய்தார். இதனால் அவரின் மந்திரி பதவி பறிக்கப்பட்டது. மேலும் நாட்டை விட்டு வெளியேற அவருக்கு தடை விதிக்கப்பட்டது. எம்.பி. பதவி மாதஊதியம் ரூ.3 லட்சமாக குறைக்கப்பட்டது. இருப்பினும் எம்.பி-க்களுக்கு வழங்கப்படும் ஒர் ஆண்டு சலுகை ஊதியம் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.

இந்தநிலையில் ஈஸ்வரனின் எம்.பி பதவியை முழுவதுமாக ரத்து செய்யுமாறு எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். மேலும் எதிர்க்கட்சியினர் அவர்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரினர். இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் நடந்த ரகசிய வாக்கெடுப்பில் எதிர்க்கட்சியினர் தீர்மானம் தோல்வி அடைந்தது. எதிர்க்கட்சி எம்.பி-க்கள் பலர் ஈஸ்வரனுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

1 More update

Next Story