இஸ்ரேல் மீது எம்-90 ராக்கெட்டுகளை ஏவிய ஹமாஸ்
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் எம்-90 ராக்கெட்டுகளை ஏவியுள்ளனர்.
காசா,
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா முனையை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே, 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் போர் வெடித்தது. ஹமாஸ் அமைப்பினரை முழுமையாக ஒழித்து கட்டுவோம் என இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகிறது. காசாவில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் உட்பட, 30,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் இன்று இரண்டு எம்-90 ராக்கெட்டுகளை ஏவியுள்ளனர். இது குறித்து இஸ்ரேல் விமானப்படை 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சிறிது நேரத்திற்கு முன்பு, ஒரு ஏவுகணை காசா பகுதியின் எல்லையைக் கடந்து நாட்டின் மையத்தில் உள்ள கடல் பகுதியில் விழுந்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக அவசரகால எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும் இஸ்ரேலுக்குள் நுழையாத மற்றொரு ஏவுகணையும் கண்டறியப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.