உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'நூரி' ராக்கெட் - வெற்றிகரமாக விண்ணில் ஏவியது தென்கொரியா


உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நூரி ராக்கெட் - வெற்றிகரமாக விண்ணில் ஏவியது தென்கொரியா
x

இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்ட செயற்கை கோள் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

சியோல்,

தென்கொரியா, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் 'நூரி' ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்ட செயற்கை கோள் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. மூன்று நிலைகளில் இயங்க கூடிய நூரி ராக்கெட் பூமியில் இருந்து 700 கி.மீ. தொலைவில் செயற்கைகோளை துல்லியமாக செலுத்தியது.

இதன் மூலம் செயற்கை கோளை புவியின் சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக செலுத்துவதற்கான தொழில்நுட்பமும், பெரிய வகை ராக்கெட்டுகளை தயாரிக்கும் திறன் தங்களி டம் இருப்பதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

மேலும் வரும் ஆண்டுகளில் நான்கு நூரி ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தவும், அடுத்த தலைமுறை ஏவுகணையை உருவாக்கவும் தென்கொரியா திட்டமிட்டுள்ளது. சொந்த தொழில் நுட்பத்தில் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் 10-வது நாடு தென்கொரியா என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story