அதிபரான பின் முதல் முறையாக ஆசிய பயணம் மேற்கொள்ளும் ஜோ பைடன்


அதிபரான பின் முதல் முறையாக ஆசிய பயணம் மேற்கொள்ளும் ஜோ பைடன்
x

ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு ஆசிய நாடுகளுக்கு முதல் முறையாக பயணம் மேற்கொள்கிறார்.

வாஷிங்டன்,

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாடு, ஜப்பானில் வருகிற 24-ந் தேதி நடைபெற உள்ளது. குவாட் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஜப்பான் செல்ல உள்ளார்.

முன்னதாக இன்று தென் கொரியா செல்லும் அவர், தென் கொரிய அதிபர் மற்றும் அதன் பிறகு ஜப்பான் பிரதமரை சந்தித்து பல்வேறு முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

அமெரிக்க அதிபராக அதிபர் ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு ஆசிய நாடுகளுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story