பாகிஸ்தான்: மருத்துவமனையில் திடீர் தீ விபத்து... பல லட்சம் மதிப்பிலான மருந்து பொருட்கள் எரிந்து நாசம்


பாகிஸ்தான்: மருத்துவமனையில் திடீர் தீ விபத்து... பல லட்சம் மதிப்பிலான மருந்து பொருட்கள் எரிந்து நாசம்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 4 Jun 2022 8:22 AM GMT (Updated: 4 Jun 2022 8:24 AM GMT)

லாகூரில் உள்ள குல்பெர்க்கில் குழந்தைகள் மருத்துவமனை ஒன்றில் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லாகூர்,

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள குல்பெர்க்கில் குழந்தைகள் மருத்துவமனை ஒன்றில் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த பெரும் தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் ஏழு தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கு பணியில் ஈடுபட்டனர். ஆனால், தீ எதிர்பார்த்ததை விட அதிகமாக பரவி இருந்ததால், கூடுதல் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

நீண்ட நேரம் போராடி தீயணைப்புப்படையினர் தீயை அணைத்த நிலையில், மீண்டும் எதிர்பாராமல் திடீரென தீ பரவியதால், தீயை முற்றிலுமாக அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தில் இதுவரை உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. மீட்பு பணியின் போது, ​​அங்கிருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். ஆனால், மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் உள்ள மருந்துக் கிடங்கில் முழுவதுமாக தீ பரவியதால், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருந்து பொருட்கள்கள் தீயில் எரிந்து சாம்பலானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பெரும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று கூறிய அதிகாரிகள், தீயை அணைத்த பிறகு விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.


Next Story