தெற்கு ஈரானில் நிலநடுக்கம்- ரிக்டா் அளவில் 5.6 ஆக பதிவு


தெற்கு ஈரானில் நிலநடுக்கம்- ரிக்டா் அளவில் 5.6 ஆக பதிவு
x

தெற்கு ஈரானில் 5.6 ரிக்டா் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தெஹ்ரான்,

தெற்கு ஈரானின் ஹார்மோஸ்கான் மாகாணத்தில் கிஷ் தீவு உள்ளது. இந்த தீவிற்கு வடகிழக்கே 22 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கமானது காலை 8.07 மணியளவில் 22 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் ஒருவா் உயிாிழந்துள்ளதாகவும். 30-க்கும் மேற்பட்டோா் காயம் அடைந்துள்ளதாக ஈரான் செய்தி நிறுவனம் தொிவித்துள்ளது.


Next Story