பாகிஸ்தான் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை... பிரிவினை தவறு என்று நினைக்கின்றனர் - ஆர்.எஸ்.எஸ். தலைவர்


பாகிஸ்தான் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை... பிரிவினை தவறு என்று நினைக்கின்றனர் - ஆர்.எஸ்.எஸ். தலைவர்
x
தினத்தந்தி 31 March 2023 8:18 PM GMT (Updated: 1 April 2023 8:34 AM GMT)

பாகிஸ்தான் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை... பிரிவினை தவறு என்று நினைக்கின்றனர் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் கூறினார்.

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் போபாலில் இந்து மத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசியதாவது, அகண்ட பாரதம் என்பது உண்மை. ஆனால், பிளவுபட்ட பாரதம் என்பது கனவு. 1947 பிரிவினைக்கு முன்பு இது பாரதம். பிரிவாதத்தால் பாரதத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்களா? வலி உள்ளது.

பாரதம் பாகிஸ்தானை தாக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. நாம் தாக்குதல் நடத்தும் கலாசாரத்தை சேர்ந்தவர்கள் அல்ல. தற்காப்பிற்காக கடுமையான பதிலடியை கொடுக்கும் கலாசாரத்தை கொண்டவர்கள் நாம். பாரதத்தில் இருந்து பிரிந்து சென்றது தவறு என்று பாகிஸ்தான் மக்கள் தற்போது கூறுகின்றனர். பிரிவினை தவறு அனைவரும் கூறுகின்றனர்' என்றார்.


Next Story