அமெரிக்கா: மதவழிபாட்டு தலத்தில் துப்பாக்கிச்சூடு - பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு


அமெரிக்கா: மதவழிபாட்டு தலத்தில் துப்பாக்கிச்சூடு - பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
x

அமெரிக்காவில் மதவழிபாட்டு தலத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே, அந்நாட்டின் அலபாமா மாகாணத்தில் உள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டு தலத்தில் நேற்று துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

வெஸ்டாவியா ஹில்ஸ் நகரில் உள்ள செயின்ட் ஸ்டீபன் எபிஸ்கோபல் மத வழிபாட்டு தலத்தில் நேற்று உணவு விருந்தின்போது துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில், 2 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 84 வயது பெண் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், அலபாமா துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.


Next Story