போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி!


போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி!
x

போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரோம்,

சுவாசத் தொற்றுநோய் காரணமாக போப் பிரான்சிஸ் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுவாசத் தொற்றுநோய் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் மேலும் சில நாட்களுக்கு போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் ஓய்வில் இருப்பார் எனவும் வாடிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போப் பிரான்சிஸ் சமீப காலமாக முதுமை தொடர்பான உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story